மட்டு. கோப்பாவெளி, கரடியனாறு பிரதேசங்களில் சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோப்பாவெளி, கரடியனாறு பிரதேசங்களில் கடந்த வியாழக்கிழமை மாலை திடீரென வீசிய சுழல் காற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாக வரட்சியான காலநிலை நிலவி வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் சுழல் காற்றுடனான மழை பெய்தது.

இந்த சுழல் காற்றுடனான மழையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல் வெளியிட்டிருந்ததது.
கோப்பாவெளி, கரடியனாறு ஆகிய கிராம சேவை பிரிவிகளில் சேதமடைந்த வீடுகளை நேரில் சென்று பார்வையிட்ட செங்கலடி பிரதேச செயலாளர் என்.வில்வரத்தினம் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கான தற்காலிய கூரை விரிப்பினை நேற்று வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!