புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் நடைபெறும் தருணங்களில் புதுக்குடியிருப்பு வணிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என பதுக்குடியிருப்பு பிரதேச வணிகர் கழகம் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இது தொடர்பில் விளகத்தினை வழங்கக் கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருக்கு, வணிகர் கழகம் கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில்,புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காணப்படுகின்ற கழகங்கள், அமைப்புக்களை விட பாரியதும் பலம்மிக்கதுமான கழகமாக புதுக்குடியிருப்பு வணிகர் கழகம் காணப்படுகின்றுது. இந்த அமைப்பிற்கு ஏற்படும் சாதக பாதக நிலமைகளை புதுக்குடியிருப்பு பிரதேச மக்களின் வாழ்வியலில் தாக்கத்தினை செலுத்துகின்றது.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி பற்றி கலந்துரையாடும் பொழுது வணிகர் கழகத்திற்கு அழைப்பு விடுக்காமை பிரதேச அபிவிருத்தியில் ஏதோ தவறுகள் இடம்பெறுகின்றன என எண்ணவைக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.(மு)