வரலாற்றில் எந்த அரசாங்கமும் வழங்காத சம்பள உயர்வை எமது அரசு வழங்கியது – அமைச்சர் ஜே.சி.அலவத்துவெல

இலங்கை வரலாற்றில் எந்த அரசாங்கத்தினாலும் வழங்கப்படாத சம்பள உயர்வு, அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பள அளவு 2020 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் எனவும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவெல தெரிவித்தார்.

குருணாகல் ரிதிகம பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், எட்டுக் கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பிரதேச செயலர் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஜெ.சி.அலவத்துவெல இவ்வாறு தெரிவித்தார்

இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட செயலாளர் காமினி இலங்கரத்தன, பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!