அமெரிக்காவுடன் அக்சா, மற்றும் சோபா உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று ஒன்றுகூடி கலந்துரையாடியிருந்தனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அக்சா, சோபா உடன்பாடுகளில் கையெழுத்திடக்கூடாது என்பதே தமது நிலைப்பாடென்றும், இதுகுறித்து மக்களை தீர்மானிக்க விடுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் பிரேரிக்கப்பட்டால், அவரை விடவும் தானே அதிகம் சந்தோசப்படுவதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமைப்பு முயற்சி, பொதுஜன பெரமுனவிற்கு சவாலாக அமையுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 2015ஆம் ஆண்டு காணப்பட்ட கூட்டமைப்பை விடவும் குறைவான எண்ணிக்கையுடைய கூட்டமைப்பாகவே அது காணப்படும் என பதிலளித்துள்ளார்.(மு)