அல்லாஹ்வின் சிந்தனை மது போதையை விட பயங்கரமானது – அத்துரலிய தேரர்

அல்லாஹ்வின் பெயரால் ஊட்டப்படும் சிந்தனை, உணர்வு போதையை விடவும் பயங்கரமானது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

போதையை ஏற்றுக்கொண்டவருக்கு தனது தாய் தந்தையை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாது எனவும், நல்லது கெட்டது விளங்க மாட்டாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். நன்மை தீமை தெரியாது. ஒரு கோடிப் பேரை கொலை செய்தாலும் அதனை ஒரு புனிதமான செயலாகவே கருதுவார். இவ்வாறு கொலை செய்ததற்காக தான் சுவர்க்கத்துக்கு செல்வதாக கருதிக் கொள்கின்றார். இதுபோன்ற பயங்கரவாத சிந்தனையை இல்லாதொழிக்காது இந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது எனவும் தேரர் குறிப்பிட்டார். (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!