ஸ்ரீ. சு.கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு கட்டுப்படுவேன் -திலங்க சுமதிபால

பொதுஜன பெரமுன நடாத்தும் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும், அதே நேரேம் இந்த கூட்டம் அவர்களது கட்சிக் கூட்டமா அல்லது கூட்டணி அமைப்பது தொடர்பான கூட்டமா என்பது தொடர்பில் தெளிவில்லாத தன்மை காணப்படுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

11ஆம் திகதி பொதுஜன பெரமுன நடாத்தும் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த கூட்டம் பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டமோ அல்லது கூட்டணி அமைப்பது தொடர்பான கூட்டமோ என்பதிலும் தெளிவு இல்லாத தன்மை இருக்கின்றது. எது எவ்வாறானாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ அல்லது அதன் தலமையோ எடுக்கும் தீர்மானத்திற்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சார்ந்தவன் என்ற ரீதியில் பொதுஜன பெரமுனவின் எந்தவகையான கூட்டங்களில் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுப்போம். மறுபக்கத்தில் எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் வர இருக்கின்றது. அந்த விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பக்கமே நான் இருக்கின்றேன்.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கே நான் கட்டுப்படுவேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டு செல்ல மாட்டோம் என்று உறுதியளித்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெற்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக பாடுபட்டவர்களில் ஒரு தொகுதியினர் எம்முடன் இணைந்திருக்கின்றார்கள். இதேநேரம் எம்மில் ஒரு தொகுதியினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய சாத்தியம் இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்த ஒரு குழுவினர் எம்முடன் இணைவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. அதேபோன்று எம்மில் சிறுதொகுதியினர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வாய்ப்பு இருக்கின்றது. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஏற்ப அவர்களின் தொகுதியில் மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்ப இவை வேறுபடலாம்.

அவ்வாறு நடக்காது என்று எம்மால் சொல்ல முடியாது. அங்கும் இங்கும் மாறி மாறி கட்சித் தாவல்கள் நடைபெறலாம். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அது பெரிய கட்சி எமது கட்சி அனைவரையும் இணைத்து அசுர பலத்துடன் பயணிக்க வேண்டும். தனியாக நாம் எப்போதும் ஆட்சி அமைக்கவில்லை. 1970ம் ஆண்டு 1994ம் ஆண்டு 2004 அனைத்துப் பலத்தினையும் எமது கட்சி பயன்படுத்தியபோதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான பலத்தினை நிரூபிக்க முடியாமல் போனது. ஆகவே நாம் அரசாங்கத்தினை அமைக்க வேண்டுமனால் ஜனாதிபதியை நியமிக்க வேண்டுமானால் பெரும்பான்மையான மக்கள் விரும்பும் பக்கத்தில் போய் அமர்;ந்து கொள்ள வேண்டும் இல்லையேல் எம்மால் ஆட்சி அமைக்க முடியாது. (மு)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!