தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில், விகாரை நிர்மாணித்தல், பௌத்த மத மேலான்மையை தடுத்தல் என்பன தொடர்பில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டமானது இந்து அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் இந்து சமய பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்து. இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், அரசியல் கட்சிகள் பேதமின்றி பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. (மு)