கல்வியாளனும் பொதுவுடமைவாதியுமான கார்த்திகேசனின் நூற்றாண்டு விழா

கல்வியாளனும் பொதுவுடமைவாதியுமான, முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் முருகுப்பிள்ளை கார்த்திகேசனின் நூற்றாண்டு விழா நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு, யாழ். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் தலைமையுரையை, கம்யூனிஸ்ட் கார்திகேசன் அறக்கட்டளை நிதிய பொருளாளர் எஸ்.சிவகுருநாதன் நிகழ்த்தவுள்ளார்.

சிறப்புரைகளை, மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் நாகலிங்கம் அகிலன், சமூக சேவையாளர் சின்னத்தம்பி சபாநாதன், கம்யூனிஸ்ட் கார்திகேசன் அறக்கட்டளை நிதிய ஸ்தாபகர் திருமதி ஜானகி பாலகிருஷ;ணன் மற்றும் கார்த்தி கேசனின் நீண்ட நாள் தோழர் சி.கா.செந்திவேல் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

அத்துடன், கார்திகேசன் நூற்றாண்டு சிறப்பு நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது.

பொதுவுடமைவாதியான முருகுப்பிள்ளை கார்த்திகேசன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மிக நீண்ட காலம் ஆசிரியராகவும், இறுதியில் அதிபராகவும் பணி புரிந்தார். அத்துடன், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி என்பனவற்றிலும் அதிபராகப் பணிபுரிந்தார். கல்லூரிகளின் சஞ்சிகைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

பாடசாலைகளின் வெளியீடுகள், சனசமூக நிலையங்களின் வெளியீடுகள், பலவிதமான வைபவங்களின் போது வெளியிடப்பட்ட மலர்கள் என்பனவற்றிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இதுதவிர, கொழும்பிலிருந்து வெளிவந்த பல ஆங்கில, தமிழ் பத்திரிகைகளிலும் அவ்வப்போது பல ஆக்கங்களை எழுதியுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!