வீதி பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வடக்கு ஆளுநரை சந்தித்தனர்

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் வடக்கு மாகாண வீதி பாதுகாப்பு சபை உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களை குறைப்பதற்கு, இந்த இரண்டு சபைகளும் இணைந்து எவ்வாறு செயற்படுதல் மற்றும் மக்களிடையே விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக, வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!