அமரர் வி.தர்மலிங்கத்தின் உருவச்சிலை திறப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் முகாமையாளரும், மானிப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் தந்தையாருமான அமரர் வி.தர்மலிங்கத்தின் உருவச்சிலை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகத்தில், அதிபர் செல்வஸ்தான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன், பிரதம விருந்தினராக கலந்துகொண்டு, உருவச் சிலையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ். மாநர சபை முதல்வர் ஆர்னோல்ட், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம், கட்சியின் செயற்குழு உறுப்பினர் சிவபாலசுப்பிரமணியம், நவாலியூர் கௌரிகாந்தன், வட மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா, வட மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், வவுனியா நகர சபை உறுப்பினர் சு.காண்டீபன், தர்சன், நிரோசன் உள்ளிட்ட பிரதேச சபை தவிசாளர்கள், நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், சமயப் பெரியார்கள், கல்விச் சமூகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!