2 இலட்சம் மீன் குஞ்சுகள் விடுவிப்பு

நன்னீர் மீன் வளர்ப்பு தினைக்களத்தினால், நுவரெலியா காசல்ரீ நீர்த்தேக்கத்தில், 2 இலட்சம் மீன் குஞ்சுகள் விடுக்கப்பட்டுள்ளது.

உடவலவ நன்னீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட, மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன.

மலையக மக்களின் போஷாக்கு நலன் கருதி, மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 3 மாத காலத்தின் பின்னர், சுமார் 4 முதல் 7 கிலோ கிராம் வரையான நிறையை கொண்டதாக மீன்கள் காணப்படும் எனவும், நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான நன்னீர் மீன் வளர்ப்பு திணைக்கள அதிகாரி குஷான் புத்திக்க தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், காசல்ரீ மீன்பிடி சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!