அம்பாறை மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழமற்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் யுவதிகள் மத்தியில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பும் கலந்துரையாடல் செயலமர்வு கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் மற்றும் இளைஞர் அபிவிருத்தி அகம் திட்டமுகாமையாளர் க.லவகுகராஜா தலைமையில் இன்று நடைபெற்றது.
மூன்று நாள் செயலமர்வின் இறுதிநாள் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ், முஸ்லிம், கிருஸ்தவ இளைஞர் யுவதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு இனரீதியான, மதரீதியான பிணக்குகளை எவ்வாறு நல்லிணக்கத்தின் அடிப்படையில் தீர்ப்பது என்றும். இளைஞர் சமூகங்கள் இணைந்து நாட்டை எவ்வாறு நல்லிணக்கத்துடன் கட்டியெழுப்புவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடலில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஏப்பிரல் 21 இல் ஏற்பட்டஅசாரதாரண சூழ் நிலையின் பின்னர் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ளசந்தேகப் பார்வைகளை எவ்வாறு களைவது என்ற நல்நோக்கோடு அம்பாறை மாவட்ட மனிதஉரிமைகள் ஆணைக்குழுவும் இளைஞர் அபிவிருத்திஅகம் நிறவனமும் இணைந்து இச்செயலமர்வினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. (சி)