ஆணழகன் மாதவன் ராஜ்குமாருக்கு பாராட்டு

ஆசிய ஆணழகன் போட்டியில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெண்லகப் பதக்கத்தை வென்ற, நுவரெலியா லபுக்கலை கொண்டகலை பிரிவில் வசிக்கும் இளைஞரான, மாதவன் ராஜ்குமார் என்பவரை ஊக்குவிக்கும் வகையில், அவரை வரவேற்று அவருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்வு, கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில், இன்று இடம்பெற்றது.

இலங்கை – இந்திய சமுதாய பேரவையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் இணைந்து இந்த அன்பளிப்பை வழங்கியுள்ளது.

அத்துடன், எதிர்வரும் காலத்தில் டுபாய் நாட்டில் நடைபெறவுள்ள ஆணழகன் போட்டியில் பங்குபற்றுவதற்காக செல்லவுள்ள மாதவன் ராஜ்குமாருக்கு, விமான பயணச்சீட்டும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், கொட்டலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், உப தலைவர், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!