யாழ். நல்லூர் பகுதியில் இருவர் கைது

போலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும், இன்சுலேசன் ரேப் ஒட்டி மறைத்தவாறு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர், யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல், நல்லூர் ஆலய பின் வீதியில், துர்க்கா மணிமண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த, நண்பரை ஏற்றுவதற்கு வருகை தந்த போது, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வீதியால் பயணித்த ஐஸ்கிறீம் வானுடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், தொலைபேசியில் வேறு ஒருவரைத் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு வருகை தருமாறு அழைத்துள்ளார்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸாரும் வருகை தந்துள்ளனர். அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த போது, அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருவர் வந்திறங்கினர்.

வர்கள் வருகை தந்த மோட்டார் சைக்கிளின் முன்பக்க இலக்கத் தகடு டபிள்யூ.பி என மேல் மாகாண பதிவு இலக்கமாகவும், பின்பக்க இலக்கத் தகடு சி.பி என மத்திய மாகாண பதிவு இலக்கமாகவும் காணப்பட்டது,
அதனை ஆராய்ந்த போது, இலக்கத் தகடுகளை மோசடியாக மாற்றம் செய்தமை கண்டறியப்பட்டது.

அத்துடன், இளைஞர்கள் இருவரில், ஒருவரின் தலைக்கவசத்தின் முகப்புக் கண்ணாடி, கறுப்பு இன்சுலேசன் ரேப் மூலம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது.

அதனால், இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!