குருணாகல் பல்கலையை மூட இடமளிக்க முடியாது : மகிந்த

குருணாகல் குளியாப்பிட்டியில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தை மூடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று முற்பகல் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினர்.

வட மேல் பல்கலைக்கழகத்திற்கு, குளியாப்பிட்டிய பல்கலைக்கழக விஞ்ஞானப் பீடத்தை வாரிக்கொள்வதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக, மாணவர்கள் முறையிட்ட போது, இந்த வாக்குறுதியை வழங்கினார்.

இந்த சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!