நுவரெலியா, பெற்றோசோ தோட்டப் பகுதியில் குளவிக் கொட்டு : 7 பேர் காயம்

நுவரெலியா பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டப் பகுதியில், குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொகவந்தலால பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.


இன்று மதியம், குறித்த 7 பேரும் பொகவந்தலாவ பெற்றோசோ தோட்டப் பகுதியில் விவசாய
பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில், மரத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்து வந்து தாக்கியதாக, காயங்களுக்கு உள்ளான விவசாயிகள் குறிப்பிட்டனர்.


சம்பத்தில் 6 ஆண்களும் ஒரு பெண் உட்பட 7 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!