யாழ். வல்வெட்டித்துறை படுகொலை நினைவு தினம்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை நகரில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது, பொதுச்சடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

1989 ஆம் ஆண்டு, இந்திய இராணுவத்தினால் 72 பொது மக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அந்த படுகொலையின் 30 ஆவது நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!