மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயித்தியமலை, நெடியமடு போன்ற கிராமங்களில் நேற்று மாலை வீசிய சுழல் காற்றினால் சில வீடுகள் சேதமடைந்துள்ளன.
நேற்று மாலை 6 மணியளவில் மழையுடன் வீசிய காற்றினால் ஆயித்தியமலை ஒளிமடு கிராமத்திலும், நெடியமடு கிராமத்திலும் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
நெடியமடு கிராமத்தில் இரண்டு வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஒளிமடுவில் உள்ள கிராமத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இச் சேதத்தினை கிராம சேவகர் பார்வையிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். (சி)