தமிழ் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்த தமிழ்க்கட்சிகள் முன்வர வேண்டும் என, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எமது செய்திப்பிரிவுக்கு இன்று வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது இந்தக் கோரிக்கையை விடுத்தார். அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் யாழ்ப்பாணம் விஜயம், வலி. வடக்கு குப்பை

பிரச்சினைகள் தொடர்பிலும், எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டார்.

நாமல் ராஜபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது, த.தே.கூட்டமைப்பு
பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 முறை தூதுக்குழுவுடன் வாகன அனுமதிக்காகவா பேச்சுவார்த்தை நடத்தினார்கள்?. அவர்களுக்கு வால் பிடிக்கின்ற சிலர் இருப்பாதால் இப்படியான நிலை ஏற்பட்டுள்ளது. முன்னய கால்த்தில் சமாதானத்தின் தேவதை என சந்திரிக்காவை கூறிக்கொண்டு, ரெலோ தவிர்ந்த ஏனையகட்சிகள் அவரை ஆதரித்தது.

அவராவது ஒரு தீர்வுத்திட்ட பொதியை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதை ஐ.தே.க வினர் ரணில் உள்ளிட்டோர் எரித்தனர்.

2005 தேர்தலில் விடுதலைப்புலிகள் தேர்தலை புறக்கணிக்க சொன்னார்கள். மஹிந்த ஜனாதிபதி ஆனார். 2010 இல் போர் முடிந்த பின், கூட்டமைப்பினர் பொன்சேகாவை ஆதரித்தார்கள். அதை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக நான் களமிறங்கினேன்.

பின் 2015 தேர்தலில் இன்றைய ஜனாதிபதி வந்தார். ஒரு சில முன்னேற்றங்கள் உண்டு. ஆனால் நிரந்தரமான இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

வரும் தேர்தலில் மஹிந்த மற்றும் ஐ.தே.க கை காட்டுபவரே களமிறங்குவார். அதனால் யாரையும் ஆதரிக்கும்
நிலையில் நாங்கள் இல்லை.

இந்த ஆண்டு, திட்டவட்டமான ஒரு உறுதியை சர்வதேச சமூகம் அடங்கிய குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னும் வழங்கிய வாக்குறுதிகளை காப்பமல் இருந்தால், சர்வதேச தலையீட்டை கோர அது இலகுவாக இருக்கும். இல்லை என்றால் எங்களுடைய கோரிக்கைகளை சர்வதேசத்திடம் தெரியப்படுத்தி, ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தி, சகல தமிழ் கட்சிகளும் ஒருமித்து, தமிழ் மக்களின் விடுதலைக்கான தேர்தலை நடாத்த வேண்டும்.
இனியும் நம்பி ஏமார்ந்து விட்டோம் என நாம் கூறிவிடக் கூடாது.

சர்வதேச உத்தரவு இல்லாமல், ஒரு வேட்பாளரை ஆதரிப்பது, இனத்திற்கு நாங்கள் செய்யும் துரோகம்.

1990 ஆம் ஆண்டு சீமெந்து தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னரும், அங்கிருந்து படையினரால் கற்கள்
எடுத்துச் செல்லப்பட்டது. வலி வடக்கில், சுண்ணாம்புக்கல் அகழ்வால் அங்கே சமுத்திரங்கள் போன்ற
பாரிய பள்ளங்கள் உள்ளன.

அப்படியான பள்ளங்களை மூட, குடாநாட்டு குப்பைகளை போட்டு அதை மூட, ஜப்பான் நாடு தீர்மானித்தது.
அது மூடப்பட வேண்டும் என்றால் உரிய சுகாதார முறைப்படி உத்தரவாதத்துடன் செய்ய வேண்டும்.

அனுராதபுரம் பகுதியில் இருந்து மருத்துவக் கழிவுகளை இங்கு கொண்டுவந்து கொட்டுவது பிழையான நடைமுறை. இதனை அனுமதிக்க முடியாது. என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!