ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் இடம்பெற்ற 6 சிறிய குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாய்லாந்து நாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கான ஆசியான் மாநாடு நடைபெற்று வருகிறது.
இதில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்தன. முதலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பெண்கள் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவம் டவுண்டவுன் ஸ்க்ரைஸ்கிராப்பர் அருகே நடந்தேறியது. இதில், அதன் கண்ணாடிகள் சிதறின.
இந்த சம்பவங்களை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.(சே)