ஆஷஸ் தொடரின் முதல் நாள் முடிவு

அவுஸ்திரிலேயா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்றிருந்தது.

குறித்த போட்டி நேற்றைய தினம் பெர்மிங்கமில் ஆரம்பமானது .

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்ப்பாட தீர்மானித்தது.

இதன்படி அந்த அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரிலேய அணி சார்பில் ஸ்டிவ் சுமீத் 144 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஸ்ட்டுவ்ர்ட் போர்ட் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

தமது முதல் இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 10 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் முதலாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

குறித்த போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கிண்ணத்தின் முதல் போட்டியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது,(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!