தற்காப்பு கலை ஆசிரியர் சிகான் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு

சர்வதேச புகழ்பெற்ற தற்காப்பு கலை ஆசிரியர் சிகான் கணபதிபிள்ளை இராமச்சந்திரனின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

இலங்கை கராட்டி டு ராம் சங்கத்தின் தலைவரும் சர்வதேச புகழ்பெற்ற தற்காப்பு கலை பிரதம ஆரிரியருமான  சிகான் கணபதிபிள்ளை இராமச்சந்திரனின் ஐந்தாண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக உயிரிழந்த மாணவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தீபச்சுடர் ஏற்றி உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது

இந்நிகழ்வினை தொடர்ந்து அதிதிகளின் அஞ்சலி சிறப்புரைகள் இடம்பெற்றது

இலங்கை கராட்டி டு ராம் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தின் தலைவரும் பிரதம ஆசிரியருமான கே.குககுமார ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி, தமிழ் தேசிய முன்னணியின் மாவட்ட இனைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், ஒய்வு நிலை அதிபர் ஆர் கோபாலபிள்ளை, வை.எம் .சி,ஏ நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஜெகன் ஜீவராஜ், இலங்கை கராட்டி டு ராம் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெ. சுதாஸ் கரன் மற்றும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!