குத்துச் சண்டை வீரர்கள் பாராட்டி கௌரவிப்பு

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச் சண்டையில் பதக்கம் பெற்ற, வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கல்லூரியின் அதிபர் பி.பூலோகசிங்கம் தலைமையில், இன்று நடைபெற்றது.

விருந்தினர்கள், தேசிய ரீதியில் பதக்கம் வென்ற மாணவர்கள் மாலை அணிவித்து பான்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்துச் செல்லப்பட்டு, நிகழ்வுகள் ஆரம்பமானது.

அகில இலங்கை ரீதியில், 2019 யூன் 28 ஆம் திகதி, மாத்தறையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை பெற்ற மாணவர்களள் கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம விருந்தினராக, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கலந்துகொண்டார்.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், மிகக்குறைந்த வயதில் அதாவது 07 வயதில் பங்குபற்றி தங்கப்பதக்கம் பெற்றதுடன், வடக்கு மாகாணத்தில் குறைந்த வயதில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டிய, ஆர்.கே.மைக்கல் நிம்றொத் என்ற மாணவனும், மற்றும் பதக்கங்களை பெற்ற என்.றோசி மஞ்சு, எஸ்.றிசாந்தன் ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது, விருந்தினர்களால், பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில், வவுனியா நகர சபை உறுப்பினர் கெ.சந்திரகுலசிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் என்.வி.சுந்தராங்கன், அசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!