ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், அமைப்பாளர் துசாரா தலைமையில், முல்லைத்தீவு அலுவலகத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள, 5 பிரதேச பிரிவுகளுக்கான கட்சி அமைப்பாளர்களுக்கான அங்கத்துவத்தை, கட்சியின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சுகந்தகுஞ்சி நிலமே வழங்கி வைத்தார்.
இதன் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முட்டுக் கொடுக்கும் கட்சியாக செயற்படுவதாகவும், தமிழ் மக்கள் விடயத்தில் எந்தவித கவனமும் செலுத்துவதில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் சுகந்தகுஞ்சி நிலமே குற்றம் சுமத்தியுள்ளார். (சி)