தேவாலய புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கீடு

மன்னார் மாவட்ட பகுதிகளில் உள்ள, கிறிஸ்தவ தேவாலயங்களின் புனரமைப்பு பணிகளுக்காக, முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான தேவமனோகரன் சுவாமிநாதனின் நிதி ஒதுக்கீட்டிற்கான ஆவணம், இன்று மன்னார் மறை மாவட்ட ஆயரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


ஆலயங்களின் புனரமைப்பு பணிகளுக்காக, சுமார் 5.5 மில்லியன் ரூபா நிதிக்கான ஆவனம், இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் ஆயர் இல்லத்தில் வைத்து, மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டே ஆண்டகையிடம், ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜேம்ஸ் பிரிமிலஸ் கொஸ்தா, நிதிக்கான ஆவணத்தை கையளித்தார்.

இதன் போது, மன்னார் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் அப்துல் சமியூ முஹமது பஸ்மி உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

மன்னார் மறை மாவட்ட ஆயர் மற்றும் குருக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, கம்பெரலிய திட்டத்தின் ஊடாக நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!