வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில், இரு தமிழப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முரண்பட்டுக் கொண்ட சம்பவம், இன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில், சிவனை வழங்கச் செல்லும் வழியில் படிகள் அமைப்பதற்கு அனுமதி கோரி, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் போது, வனவள திணைக்களத்தினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர், குறித்த படிக்கட்டுகளை அமைப்பதற்கு பொலிஸார் மூலம் தொடர்ந்தும் தடை விதித்து வருவதாகவும், அதன் பிரகாரம் படிக்கட்டுகளை அமைக்க முடியாதுள்ளது எனவும் தெரிவித்ததுடன், தற்போது கயிற்றின் உதவியுடனேயே மலை உச்சிக்கு சென்று வழிபட வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிரதேச செயலாளர் மாகாண சபையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டே படிகள் செய்யப்பட்டுள்ளதால், அதனை அமைக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து அபிருத்திக்குழுவில் முடிவெடுப்பதாகவும், அரசாங்க அதிபர், உடனடியாக கலாசார அமைச்சருக்கு, கடிதம் மூலம் குறித்த சம்பவத்தை அறிவிக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டு, அதன் நிமிர்த்தம், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசாவை சந்தித்து கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தனர்.
இதன் போது குறுக்கிட்ட வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அரசியல் அமைப்புபோல் அதற்கும் காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
உடனடியாக பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, அவ்வாறு கதைக்காதீர்கள். நீங்கள் எதை கூற வருகின்றீhகள் என்பது எமக்கு தெரியும். எனவே விடயத்திற்கு வாருங்கள். இப்போது அரசியல் அமைப்பு பற்றி கதைக்க தேவையில்லை என தெரிவித்தார். (சி)