மொட்டின் பிரச்சார கூட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா இலட்சம் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விஜயம் தந்திருந்தனர்.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த செய்தி விக்னேஸ்வரனின் வருகையின் பின்னரே அவை இடைநிறுத்தப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போதுள்ள அரசாங்கம் ஹோட்டல்களையும் தமக்கான கட்டிடங்களையும் நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தமது ஆட்சி காலத்திலேயே வீதிகள் காப்பீடாக மாற்றப்பட்டதாகவும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன் தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்கள் பிரதிநிதியாக அங்கம் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கம்பர் என்ற சலுகையை வழங்கி அவர்களது உறவினர்களுக்கும் அவர்களுக்கும் சுகபோக வாழ்க்கையையும் வழங்கியது என்றார்.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பெரேரா மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே நாட்டில் உள்ள 25,000 கிராமங்களிலும் உள்ள சிறிய மற்றும் பெரிய கிராமங்களுக்கு சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாம் கேட்டு அறிந்து அவற்றைத் தீர்த்து வைப்போம் என்றார்.

அத்துடன் இன்று நாம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருப்பது நமது கட்சி உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே, தமது வருகை அமைந்துள்ளதாக இதன்போது குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் நகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!