ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது புதிய கூட்டமைப்பு அமைப்பது தொடர்பான பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதனை அடுத்து சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க கோரும் குழுவினரால் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை பெரும்பான்மை வாக்குகளினால் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி கூட்டமைப்பு தொடர்பில் செய்துகொள்ள உள்ள ஒப்பந்தத்திற்கு கையொப்பமிட வேண்டாம் என சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க கோரும் உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா, சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட குழுவினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதன்போது செயற்குழுவின் பெரும்பான்மையை கவனத்திற் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் புதிய கூட்டமைப்பு அமைப்பது தொடர்பான பிரேரணைக்கு பெரும்பான்மையினர் எதிராக வாக்களித்து இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் புதிய கூட்டமைப்பு அமைப்பது தொடர்பான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்போது குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 35 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதாகவும் சஜித் பிரேமதாஸ வாக்களிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(சே)