மட்டக்களப்பு மாநகர சபையின் 20வது மாதாந்த பொது அமர்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் 20 ஆவது மாதாந்த பொது அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் இன்று நடைபெற்றது .

மட்டக்களப்பு மாநகர சபையின் நியதிச் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நிதிச் செயற்பாடுகளின் நகரசபைக்குட்பட்ட  பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளை, நடைமுறைப்படுத்துதல் போன்ற விடயங்களும் சபையால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள்  தொடர்பில் சபையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு இன்றைய சபை அமர்வில்     கலந்துரையாடப்பட்டது.

மாநகரசபையில் இன்று இடம்பெற்ற 20வது மாதாந்த பொது அமர்வின் போது அரச கரும மொழியாக அரசினால்   அங்கீகரிக்கப்பட்டுள்ள  தமிழ் மொழியினை மட்டக்களப்பு மாநகரில் அனைத்து இடங்களிலும் முதன்மை மொழியாக செயல் படுத்துவது தொடர்பாக முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு சபை உறுப்பினர்களினால் நிறைவேற்றப்பட்டதுடன் ஞாயிறு தினங்களில் வர்த்தக நிலையங்கள் திறப்பது மற்றும் ஞாயிறு தினங்களில் பிரத்தியோக வகுப்புகள் நடாத்தப்டுவது தொடர்பாகவும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு சபை உறுப்பினர்களினால் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பில் சம்பவத்தில் உயிரிழந்த உறவுகளுக்காக மாநகர சபையினால் மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் நிர்மாணிக்கப்படுகின்ற தூபியினை காந்தி பூங்கா உள்பகுதியில் நிர்மாணிக்க வேண்டும் என  உயிரிழந்த உறவுகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக மாநகர சபை உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்டு  வாதம் பிரதி வாதங்கள்  இடம்பெற்றது.

இடம்பெற்ற வாதம் பிரதி வாதங்கள் தொடர்ந்து  மாநகர சபையினால்  காந்தி பூங்கா அருகில் நிர்மாணிக்கப்படுகின்ற தூபி தீர்மானிக்கப்பட்ட இடத்திலேயே நிர்மாணிக்கப்படும் என மாநகர முதல்வரினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் தலைமையில் நடைபெற்ற  மட்டக்களப்பு மாநகரசபையின் 20 ஆவது மாதாந்த பொது அமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள்,  மாநகர பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன்   மாநகரசபை பிரதம கணக்காளர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!