முல்லைத்தீவில் 77 பட்டதாரிகளுக்கு நியமனம்! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 126 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் 126 பட்டதாரிகளின் பெயரில் ஏற்கனவே நியமனம் பெற்ற 14 பேர் மீளவும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களை தவிர்த்து இம்முறை 112 பேர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் 35 பேருக்கான நியமனங்கள் கொழும்பில் வைத்து வழங்கப்பட்டிருந்த நிலையில், ஏனைய 77 பெயருக்கான நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம், பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்கள்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!