இந்தோனேஷியாவில் கப்பலில் தீ:மூவர் பலி!

இந்தோனேஷியாவில் பழுதுபார்ப்பதற்காக வந்த சொகுசுக் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் ஹரிமுன் மாவட்டத்தில் உள்ள கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் பழுது பார்க்கும் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பலில் நேற்றைய தினம் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் சிலர் கப்பலில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கப்பலின் ஒரு பகுதியில் திடீரென தீ பரவியுள்ளது.

இதனை அடுத்து கப்பலில் இருந்த தீயணைப்பான் கருவிகள் உதவியுடன் தீயை அணைக்க முயன்றபோதும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென கப்பல் முழுவதும் பரவியது.

தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!