கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் தினமும் இடம்பெற்று வரும் புகையிரத சேவைகள் எதிர்வரும் 3ஆம் திகதியிலிருந்து ஆறு சேவைகளாக அதிகரிக்கப்படவுள்ளன.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய புகையிரதங்களை யாழ்ப்பாணத்துக்கு சேவையில் ஈடுபடுத்துவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில் இதுவரை காலமும் நான்கு சேவைகளாக நடைமுறையிலிருந்த புகையிரத சேவைகள் 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் ஆறு சேவைகளாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் உத்தரதேவி புகையிரத சேவைக்கு அடுத்ததாக புதிய புகையிரத சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பிற்பகல் 1.45 மணிக்கு இடம்பெறும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதிக்குப் பின்னர் மாலை 5.45 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு மற்றுமொரு புகையிரத சேவையும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இரவு தபால் புகையிரதம் காங்கேசன்துறையிலிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு யாழ்.மத்திய புகையிரத நிலையத்தை வந்தடைந்து கொழும்புக்குப் புறப்படும். தற்போது கொழும்பிலிருந்து இரவு 8.30 மணிக்கு யாழ்.நோக்கிப் புறப்படும் இரவு தபால் புகையிரதம் இரவு 9 மணிக்கு யாழ்.நோக்கி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் புகையிரத சேவைகள் 6 ஆக அதிகரிப்பு
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் தினமும் இடம்பெற்று வரும் புகையிரத சேவைகள் எதிர்வரும் 3ஆம் திகதியிலிருந்து ஆறு சேவைகளாக அதிகரிக்கப்படவுள்ளன.(சே)