வடமராட்சி கிழக்கு மாமுனை ஸ்ரீ நாகதம்பிரானின் சமுத்திர தீர்த்த திருவிழா (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனை ஸ்ரீ நாகதம்பிரான் திருக்கோயில் சமுத்திர தீர்த்த திருவிழா நேற்று இடம்பெற்றது.

அலங்கார உற்சவ பெருவிழாவின் 11ஆம் திருவிழாவான நேற்றைய தினம் சமுத்திர தீர்த்த திருவிழா இடம்பெற்றது.

ஆலயத்தில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று அங்கிருந்து பிள்ளையார், முருக பெருமான் சகிதம் வீதி வழியாக சமுத்திரம் சென்று நாக தம்பிரானுக்கு சமுத்திர தீர்த்தமாடல் இடம்பெற்றது.

ஆலய திருவிழா பிரதம குரு சிவசிறி கா.புவனேஸ்வரக் குருக்கள் தலைமையில் சமுத்திர தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

சமுத்திர தீர்த்த உற்சவத்தில் மாமுனை, நாகர்கோவில், செம்பியன்பற்று உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த அடியார்கள் கலந்து கொண்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!