யாழ்ப்பாணத்தில் கேரள கஞ்சா மீட்பு! (படங்கள் இணைப்பு)

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்தப்பட்ட 122.5 கிலோ கேரள கஞ்சா யாழ்ப்பாணம் மாதகல் துறை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தம்மிக்க பத்தியா ஜா தெரிவித்துள்ளார்.

கடற்படையின் புலனாய்வு பிரிவினரும், இளவாலை பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே கேரள கஞ்சா மீட்டுள்ளது.

கேரள கஞ்சா தொகை கடல் வழி வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா தொகை குறித்து இளவலை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கைபெற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 2 கோடியே 24இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேக நபர்கள் குறித்த கடல் பகுதியில் இருந்து தப்பி சென்ற நிலையில் அவர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.(நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!