ஹட்டனில் பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி! (காணொளி இணைப்பு)

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் பன்றியை காப்பற்ற முயற்சித்த முச்சக்கரவண்டி இன்று காலை பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

வீதியின் குறுக்கே பாய்ந்த பன்றியை முச்சக்கரவண்டியின் சாரதி காப்பாற்ற முயற்சித்தபோதே விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளபோதும், சாரதி சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார்.

நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் வரை பயணிகளை ஏற்றிச்சென்று விட்டு மீண்டும் நோர்வூட் பகுதிக்கு திரும்பும்போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!