அம்பாறையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன!

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் கிடைத்த விசேட தகவல் ஒன்றை அடுத்து, அப்பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், பொலித்தீன் ஒன்றில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளை மீட்டனர்.

கைக்குண்டுகள் யாவும், ஆற்றங்கரையோரம் பொலித்தீன் பை ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டதுடன், அந்தக் குண்டுகளை, சிறுவர்கள் கைக்குண்டுகள் என அறியாமல் எடுத்து விளையாடியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்ற பொது மக்கள் இணைந்து, சவளக்கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதுடன், இராணுவத்தினரும் வெடி குண்டு செயலிழக்கும் படையினரும் சம்பவ இடத்திற்கு சென்று, குண்டை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!