நுவரெலியாவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நுவரெலியாவில், உழவு இயந்திரம் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில், போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில், போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் இருந்து 3 ஆம் பிரிவு பகுதிக்கு பொருட்களை ஏற்றி சென்ற உழவு இயந்திரம், பாதையை விட்டு விலகி தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில், சாரதியும் அதன் சேவையாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
அதன் பின்னர், அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு இருவரையும் கொண்டு செல்லும் போது, சேவையாளர் உயிரிழந்துள்ளதாகவும், பலத்த காயங்களுக்குள்ளான சாரதி, அக்கரபத்தனை வைத்தியசாலையில் இருந்து, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாகவும், வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவத்தில் 35 வயதுடைய எஸ்.பொடிமாத்தியா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(நி)