மல்லாவி மத்திய கல்லூரிக்கு புதிய துவிச்சக்கரவண்டி தரிப்பிடம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மல்லாவி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட மிதிவண்டி தரிப்பிட தொகுதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொகுதி ஆகியன நேற்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.
மல்லாவி மத்திய கல்லூரி பழைய மாணவனான அருளானந்தம் மயூரனது ஞாபகார்த்தமாக அவருடைய குடும்பத்தினரால் மிதிவண்டி தரிப்பிட தொகுதியும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உடைய யுத் வித் ரலன்ட் திட்டத்தினூடாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொகுதியும் பாடசாலைக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் வாண்ட் வாத்திய அணிவகுப்போடு விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டு முதலில் அமரர் அருளானந்தம் மயூரனது ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட மிதிவண்டி தரிப்பிடத்தை, அவருடைய உறவினர்கள் திறந்து வைத்ததை தொடர்ந்து, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யுத் வித் ரலன்ட் திட்டத்தினூடாக அமைக்கப்பட்ட குடிநீர் தொகுதியினை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உடைய மாவட்ட உதவிப் பணிப்பாளர் திறந்து வைத்தார்.


மல்லாவி மத்திய கல்லூரி அதிபர் சு.ஜேசுதானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணுக்காய் கல்வி வலயத்தின் உடைய நிர்வாக பிரதி கல்விப்பணிப்பாளர் அ.சஞ்சீவன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய மாவட்ட உதவிப் பணிப்பாளர் சரோஜா குகணேசதாசன், துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் உ.பார்த்தீபன், துணுக்காய் பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர் சி.காசிநாதன், துணுக்காய் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் இ.ஜெயந்தன், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஜெ.சுகந்தன் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர். (நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!