முல்லைத்தீவில் இளம் தொழில் முனைவோருக்கு கடனுதவி! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவில் இளம் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ‘துருணு திரிய’ இளம் தொழில் முனைவோர்க்கு இலங்கை வங்கியின் கடன் திட்டத்தினூடாக நேற்றைய தினம் கடனுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் கடன் திட்டத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 06 பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மேற்பார்வை உத்தியோகத்தர் ப.தர்மேந்திரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், இலங்கை வங்கியின் புதுக்குடியிருப்பு முகாமையாளர் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.

இத்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 28 பயனாளிகள் தங்கள் வியாபாரத்தை முன்னேற்றுவதற்கு கடன்பெற்று பயனடைந்துள்ளனர். (நி)  

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!