எல்லே மக்களுக்கு புதிய தபால் கட்டடம்!

ஊவா மாகாணத்தில் எல்லே நகரில் புதிய தபால் நிலையக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் எல்லே நகரில் 14 மில்லின் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தபால் நிலையக் கட்டடம் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

புதிய தபால் நிலையக் கட்டிடத் திறப்பு விழா தபால் அதிபர் ரஞ்ஜித் ஆரியரட்ன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் எல்லேப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தபால் நிலையக் கட்டடத்தை மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஊவா மாகாண சபை முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி, ஊவா மாகாண சபை உறுப்பினர் ஜயன்த கன்னங்கர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தபால் துறையில் அதிக வருமானத்தை ஈட்டித் தரும் மாகணங்களில் ஊவா மாகாணம் முக்கிய இடத்தைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!