இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி டோலரையும் கடற்படை நேற்று (31) கைது செய்துள்ளது.

கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு வெளியே கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்த இந்திய மீனவர்கள் இலங்கை பிராந்திய கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் டோலரும் இலங்கை கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, யாழ்ப்பாணத்தில் உள்ள உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!