அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான இடம்பெற்ற வாக்கெடுப்பில், 42 வாக்குகள் ஆதரவாகவும் 2 வாக்குகள் எதிராவும் அளிக்கப்பட்டன.


அதன் மூலம் அவசரகால சட்டம் மீதான பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான விவாதம், இன்று மாலை 6.30 மணி வரை இடம்பெற்ற பின்னர், இறுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரேரணைக்கு எதிர்ப்பு இருக்கின்றதா என வினவிய போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பிரேரணை மீது வாக்கெடுப்பு கோரினார்.

அதன் பிரகாரம், சபாநாயகர் பிரேரணை மீது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறை வாக்கெடுப்பில், அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், அவசரகால சட்டம் 40 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரகால சட்ட நீடிப்புக்கு ஆதரவாக, அரசாங்கத்துடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வாக்களித்த அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் சார்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவரும், அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!