நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த திட்டம் : முஜிபுர்

முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களுக்கு இடையிலான முரண்பாட்டை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வரை கொண்டு செல்வதற்கு சிலர் விரும்புவதாக, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இன்று, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற, அவசரகாலச்சட்டத்தினை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் விவாதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு, இந்த நாட்டில் சமாதானத்தினை இல்லாமல் செய்வதற்கு, இந்த நாட்டில் இன மதங்களுக்கு இடையில் மோதலினை ஏற்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்துள்ளதாக இன்று பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிக்கை கிடைத்திருக்கின்றது.

சி.ஐ.டியின் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அறிக்கையினை அனுப்பியிருக்கின்றார். பொலிஸ் சீருடையில் இருந்து கொண்டு இந்த நாட்டில் சட்டத்தினையும் ஒழுங்கினையும் அமுல்படுத்துவதற்கு மேலாக இனவாத மதவாத குழப்பத்தினை ஏற்படுத்துவதற்கும் ஒவ்வொரு அரசியல்வாதிகளினதும் அறிவுறுத்தல்களை செவிமடுத்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முயன்றுள்ளமை இன்று உறுதியாகியுள்ளது.

இது இந்த நாட்டின் அரசியல்வாதிகளின் சூழ்ச்சி. ஏப்பிரல் 21 குண்டுத் தாக்குதலினை தொடர்ந்தும் முஸ்லீம் சிங்கள மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தி இந்த நாட்டை மீண்டும் அழிவுக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

சில பேர் இதனை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்வரை கொண்டு செல்வதற்கும் எத்தணிக்கின்றார்கள்.

அதற்காக முஸ்லீம் சிங்கள மக்கள் மத்தியில் குரோதத்தினை ஏற்படுத்த வேண்டியது அவர்களுக்கு அவசியமாகி இருக்கின்றது.

1983ம் ஆண்டு ஏற்படுத்திய கலவரத்தினால் எத்தனையோ பிரபலமான வைத்தியர்கள், புத்திமான்கள் இந்த நாட்டை விட்டு சென்றார்கள்.

பெருமளவானோர் இந்த நாட்டில் வாழ முடியாது என்று வெளியேறிச் சென்றனர்.

1983 போன்று மீண்டும் ஒன்றினை செய்வதற்கு அடிப்படை வாதிகளுக்கு தேவையாக இருக்கின்றது. முஸ்லீம் புத்திமான்கள், முஸ்லீம் வைத்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது சிலருக்கு அவசியமாக இருக்கின்றது.
என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!