பா.உ சுசில் பிரேமஜயந்த, ஐ.தே.க மீது குற்றச்சாட்டு!

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கை நாட்டை விட்டு வெளியேற காரணமானவர்கள், ஐக்கிய தேசிய கட்சியினர் எனவும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்திலேயே, கறுப்பு ஜீலை இனக்கலவரம் ஐக்கிய தேசிய கட்சியினரால் ஏற்படுத்தப்பட்டதாகவும், இதனை தற்போது அவர்கள் மறந்துவிட்டு பேசுகின்றார்கள் எனவும், பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற, அவசரகாலச்சட்டத்தினை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் விவாதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

எல்.ரி.ரி.ஈ அமைப்புடனான மோதல் இடம்பெற்ற காலத்தில் இருந்த அவசரகாலச் சட்டத்தினை 2009 ஆண்டு மே 19 இல் மகிந்த ராஜபக்ச யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து அவசரகாலச்சட்டத்தினை நீக்கினார்.

2015 – 2019 க்கு இடையிலான 4 வருடங்களில் மீண்டும் அவசரகாலச்சட்டத்தினை மீண்டும் அமுல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதான் இன்றய நிலை, இனவாதத்தினை தூண்டி மோதலை ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் இலாபம் தேட முற்படுகிறது.

அவருக்கு ஞாபகம் இருக்குமோ தெரியாது 1983ம் ஆண்டு கறுப்பு ஜீலை நடாத்தியது ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதி தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே.

ஆறுக்கு ஐந்து பெரும்பான்மை இருந்த ஐக்கிய தேசிய கட்சியே அப்போது நடாத்தியது. குண்டு வெடிப்பில் உயிரிழந்த 13 இராணுவ வீரர்களின் உடல்களை கொழும்புக்கு கொண்டுவந்து பின்னர் பொரளைக்கு கொண்டு சென்று அங்கிருந்து ஹம்பளைக்கு கொண்டு சென்றார்கள். அன்று ஏற்பட்ட குழப்பமே கலவரமானது. நாடு முழுவதும் கலவரமானது.

ஊரடங்கு சட்டம் கூட மூன்று நாட்களாக அமுல்படுத்தப்படவில்லை. அன்று ஆட்சியிலிருந்தது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இதன் விளைவாக ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவர்கள் அங்கு அமைப்பினை உருவாக்கி பாரிய நிதியினை இங்கு அனுப்பி பயங்கரவாதிகளை வளர்த்தார்கள். தற்போதும் அந்த அமைப்புக்கள் இருக்கின்றன.

இவை அனைத்திற்கும் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் எதிர்கட்சியினர் அல்ல ஐக்கிய தேசிய கட்சியினராகிய நீங்கள். என குறிப்பிட்டார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!