48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசா

இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட 48 நாடுகளுக்கு கட்டணமற்ற வீசாக்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள்  நாளைமுதல்  அமுல்படுத்தப்படும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகல நாடுகளுக்கும் எதிர்வரும்  ஆறு மாதங்களுக்கு  கட்டணமற்ற முறையில்  வீசாக்களை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என்று  சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் விளமளிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

அமைச்சர் ஜோன் அமரதுங்க ,அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் அலுவிஹார உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.  வெளிநாட்டு தூதுவர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.

மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளுடன் ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா, பெலிஜியம், பெல்காரியா, கனடா, கம்போடியா, சீனா, கொராடியா, சைப்ரஸ், டென்மார்க், எஸ்டோனியா. பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, க்றீஸ், ஹங்கேரி, இந்தோனிசியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, லட்வியா, லிதுஹானியா, லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.

மேலும் மலேசியா, மல்டா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பிலிபைன்ஸ், போலந்து, போர்த்துக்கல், ரோமானியா, ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்லோவானியா, ஸ்பெயின், சுவிடன், சுவிஸ்லாந்து, தாய்லாந்து , செக் குடியரசு, ஸ்லொவொக் குடியரசு மற்றும் உக்ரைன் ஆகிய 48 நாடுகளுக்கே இவ்வாறு கட்டணமற்ற வீசாக்கல் வழங்கப்படவுள்ளன.

இந்நிலையில் குறித்த நாடுகளுக்கான வீசாக்களை  தற்போது இணையத்தளத்தினூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக   www.eta.lk  என்ற இணையத்தளத்தினூடாக வீசாக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளவும் முடியும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!