உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவி புரிவோம்

உலக வை.எம்சி.ஏ ஸ்தாபக தினத்தை முன்னிட்டு “உதிரம் கொடுத்து உயிர்காக்க உதவிபுரிவோம்“ எனும் தொனிப்பொருளில் விசேட இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

வை.எம்.சி.ஏ நிறுவனத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு இணைந்து ஏற்பாடு செய்யப்பட இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஜெகன் ஜீவராஜ் தலைமையில் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் நிலவுகின்ற இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் வைத்தியசாலை வைத்தியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவும் இணைந்து இந்த மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் வைத்தியர் கே .விவேக் , வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், வை.எம்.சி.ஏ நிறுவன உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!