இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவிற்கு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான காலக்கெடுவை விதித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பமாவதற்குள் பதவி விலகுவதற்கான காலஅவகாசம் ஹத்துருசிங்கவிற்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நியுசிலாந்து அணியுடனான தொடரிற்கு முன்னர் நாங்கள் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளரை நியமிப்போம் என தெரிவித்துள்ள ஹரீன் பெர்ணான்டோ மூன்று தலைசிறந்த சர்வதேச பயிற்றுவிப்பாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹத்துருசிங்க வெளியேறாவிட்டால் நாங்கள் அவரிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் அல்லது வேறு பொறுப்பை வழங்கவேண்டியிருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹத்துருசிங்கவிற்கு மாதாந்தம் 40,000 டொலர்கள் வழங்கப்படுகின்றன இது மிகப்பெரும் தொகை என தெரிவித்துள்ள அமைச்சர் அணி தான் விளையாடும் போட்டிகளில் 35 வீதத்தினையே வெல்கின்றது என்றால் இவ்வளவு பெரிய தொகை அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு பயிற்சியாளர்களாக செயற்பட முன்வந்து ஏனைய சர்வதேச பயிற்சியாளர்கள் இதனை விட குறைவான தொகையே கேட்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாங்கள் செலுத்தும் தொகைக்கு இரண்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்கலாம் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.(சே)