போலி வேட்பாளர்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்டியிட தடை-மஹிந்த

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போலி வேட்­பா­ளர்கள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்றும், எந்­த­வொரு வேட்­பா­ளரும் போலி வேட்­பாளர் எனக் கண்­ட­றி­யப்­பட்டால் அவர் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர், மஹிந்த தேசப்­பி­ரிய அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் எச்­ச­ரித்­துள்ளார்.

ஏனைய வேட்­பா­ளர்­களின் வாக்­கு­களை கைப்­பற்­று­வ­தற்­காக அல்­லது வேட்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பரப்­புரை நேரம் போன்ற வச­தி­களை தவ­றாகப் பயன்­ப­டுத்­து­வ­தற்­காக, மற்­றொரு கட்சி அல்­லது வேட்­பா­ளரால், யாரேனும் ஒருவர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்­ட­தாகக் கண்­ட­றி­யப்­பட்டால், அவ­ரது பெயர் வாக்­கா­ளர்­களின் முன்­பாக அம்­ப­லப்­ப­டுத்­தப்­படும்.

போலி வேட்­பா­ளர்கள் என கண்­ட­றி­யப்­பட்டால், வேட்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் வச­திகள் உட­ன­டி­யா­கவே ரத்து செய்­யப்­படும் என்றும் கட்சித் தலை­வர்­க­ளு­ட­னான சந்­திப்பில் மகிந்த தேசப்­பி­ரிய எச்­ச­ரித்­துள்ளார்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் முக்­கிய அர­சியல் கட்­சி­களால், போலி வேட்­பா­ளர்கள் கள­மி­றக்­கப்­பட்­டனர். இவர்கள் மற்ற வேட்­பா­ளர்­களின் மீது சேறு பூசு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டனர்.

அத்­துடன், போலி வேட்­பா­ளர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட பரப்புரை நேரம், மற்றும் கூட்ட இடங்களையும், சம்பந்தப்பட்ட முக்கிய கட்சியினால் களமிறக்கப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பயன்படுத்தப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!