கடந்த வருடம் மாத்திரம் 12 ஆயிரம் குழந்தைகள் பலி-ஐ.நா அறிக்கை

உலக அளவில் நடைப்பெற்ற யுத்தம் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக யுத்தம் நடந்து வருகிறது. இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக யுத்தம் நிலவி வருகிறது. இத்தகைய நாடுகளில், கடந்த 2018ம் ஆண்டு நடைப்பெற்ற யுத்தம் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த கால கட்டத்தில் கடத்தல், கிளர்ச்சியாளர்களாக பயன்படுத்தப்படுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் என பல்வேறு வன்முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளின் வன்முறைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே சீராக இருந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!