வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடியவர் தேவை : துமிந்த

பதவியை பெற்ற பின்னர், நிலை தடுமாறாது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கூடிய தலைவர் ஒருவரை, 20க்கு 20 இல் வெற்றியடைய செய்ய வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று, கொழும்பில் நடைபெற்ற 20க்கு 20 என்ற தலைவரை தேடும் நிகழ்வு எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

20க்கு 20வதில் எமக்கான அரச தலைவர் ஒருவரை தேடி நாம் உருவாக்க இருக்கின்றோம். அவ்வாறு நாம் தெரிவு செய்யும் தலைவர் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கின்ற ஒருவராக அமைய வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக இருக்கின்றது.

2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி, இந்த மண்டபத்தில் தற்போதய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து, நாட்டின் புதிய கலாசாரம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பித்து, தேசிய வேலைத்திட்டத்தினை தொடங்கினோம். ஆனால் அந்த வேலைத்திட்டத்தினை தொடங்கியதன் நோக்கத்தினை, நூற்றுக்கு நூறு வீதம் செய்ய முடியாமல் போயுள்ளது. அதில் பல நிறைவேறாது நிலுவையிலும் உள்ளது.

எனவே கடந்த கால விடயங்களை பேசிக் கொண்டு இருப்பதில் பயன் இல்லை. வரலாற்றினை பாடமாக எடுத்துக் கொண்டு செயற்பட வேண்டியது உண்மை.
அதனால், எமது நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தினை, எம் மீதான குறைகளை சரி செய்து புதிய திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது.

20க்கு 20இல் நாம் தெரிவு செய்யும் தலைவர் தனிப்பட்ட பெயருக்கு அப்பால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கக் கூடியவர் யார்?

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய வல்லமை பொருந்தியவர் யார்?

தேர்தலுக்கான வாக்குறுதியினை சொல்பவராக அல்லாது, செயற்படுத்துவதற்கு உள ரீதியான உறுதி கொண்டவராக இருக்க வேண்டும். தனது தனிப்பட்ட அரசியல் இலாபங்களை தூக்கி எறிந்துவிட்டு, மக்களுக்காக மக்களுடன் நின்று பணி புரிபவராக இருக்க வேண்டும்.

அந்த பதவியினை ஏற்றதன் பின்னர், அங்கும் இங்கும் மாறாமல், பதவியினை எடுத்துக் கொண்டு தனது நோக்கத்தினை மாற்றாமல் அந்த பதவியினை பெற்றதன் பின்னர், எந்தப் பிரச்சினைகள் வந்தாலும், நாட்டின் நன்மைக்காக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றக் கூடிய ஒருவரை, எதிர்வரும் 20க்கு 20இல் வெல்ல வைக்க வேண்டும். என குறிப்பிட்டர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!